
10 வருடங்கள் கழித்து தமிழ் படத்தில் நடிக்கிறார் மலையாள நடிகை பாவனா
செய்தி முன்னோட்டம்
மலையாள நடிகை பாவனா, 10 வருடங்களுக்கு பிறகு, தமிழில் ஒரு படத்தில் நடிக்கிறார். அந்த படத்தில், முக்கிய வேடத்தில் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கிறார்.
'பட்டினம்பாக்கம்' பட புகழ் இயக்குனர் ஜெயதேவ் இந்த படத்தை இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படம், ஒரு ஹாரர்-த்ரில்லர் படம் எனக்கூறப்படுகிறது.
இது குறித்து பேசிய நடிகர் கணேஷ், "ஸ்கிரிப்ட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, அதனால் நான் உடனடியாக அதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். படத்தின் பெரும்பகுதி கொடைக்கானல் மற்றும் சென்னையில் படமாக்கப்படும்".
மேலும் அவர், "பாவனா ஒரு 'பவர்ஹவுஸ்' நடிகை மற்றும் பணிபுரிய மிகவும் நல்ல நபர்", என்று கூறியுள்ளார்.
அதோடு, வாரிசு பட வெற்றிக்கு பிறகு தனக்கு நிறைய வில்லன் வேடங்கள் வருவதாக அவர் கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
10 வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் பாவனா!
Malayalam actress, #Bhavana is making a comeback in Tamil cinema after 10 years, is playing the female lead.https://t.co/D4q21WbrL2
— Chennai Times (@ChennaiTimesTOI) February 9, 2023