LOADING...
ரூ.300 கோடி சொத்து தகராறு! வீட்டை விட்டு துரத்தப்படுகிறாரா பாரதிராஜாவின் மருமகள்?
பாரதிராஜாவின் குடும்ப சண்டை ஒட்டுமொத்தத் திரைத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

ரூ.300 கோடி சொத்து தகராறு! வீட்டை விட்டு துரத்தப்படுகிறாரா பாரதிராஜாவின் மருமகள்?

எழுதியவர் Venkatalakshmi V
Jun 15, 2026
07:25 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவின் இமயம் என்று போற்றப்படும் உலகப் புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜாவின் குடும்பத்தில், அவரது மறைவுக்குப் பின் தற்போது 300 கோடி ரூபாய் சொத்து மதிப்பு தொடர்பாக எழுந்துள்ள குடும்பப் பிரச்சனை மற்றும் வாரிசுச் சண்டை ஒட்டுமொத்தத் திரைத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி நந்தனா மற்றும் அவரது இரண்டு பெண் குழந்தைகளுக்குச் சேர வேண்டிய சொத்துரிமை மறுக்கப்படுவதாக பிரபல சினிமா விமர்சகர் திண்டுக்கல் வெங்கடேசன், 'PUBLIC WING' யூடியூப் சேனலில் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

சொத்து

மருமகளுக்குச் சொத்து தர விரும்பிய பாரதிராஜா

விமர்சகர் வெங்கடேசன், "பாரதிராஜாவின் மகன் மனோஜ் மறைந்தபோதே, அவரது மனைவி நந்தனாவிற்கும் அவர்களது இரண்டு மகள்களுக்கும் (பேத்திகள்) சொத்துக்களை நேர்மையாக எழுதிக் கொடுத்துவிட வேண்டும் என்று பாரதிராஜா ஒரு தீர்க்கமான முடிவில் இருந்தார்". "ஆனால், அந்தச் சமயத்தில் அவர்கள் சென்னையில் இருந்தால் நந்தனா சார்பாகச் சட்டரீதியான பல கேள்விகள் எழும் எனத் திட்டமிட்டு, பாரதிராஜாவின் மகள் ஜனனி தன் அப்பாவை மலேசியாவிற்கு அழைத்துச் சென்று சில மாதங்கள் தங்க வைத்தார்." எனக்கூறியுள்ளார். மலேசியாவில் இருந்தபோதும் பாரதிராஜா தனது மருமகளைப் பற்றியும், பேத்திகளைப் பற்றியும் தொடர்ந்து விசாரித்துக் கொண்டே இருந்ததாகவும், அவர்களுக்குச் சேர வேண்டிய பங்கை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னணி

வீட்டிற்குள் அனுமதிக்காத உறவினர்கள்; 300 கோடி சொத்து பின்னணி

பாரதிராஜாவின் மகள் ஜனனிக்கும், மருமகள் நந்தனாவிற்கும் இடையே பல வருடங்களாகவே கடுமையான பகை இருந்து வந்துள்ளது. "பாரதிராஜா நீலாங்கரை வீட்டில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது, அவரைப் பார்ப்பதற்காக வந்த நந்தனாவையும் அவரது மகளையும், 'மனோஜே இல்லாதபோது உங்களுக்கு இங்கே என்ன வேலை? வெளியே போங்கள்' என்று பாரதிராஜாவின் உறவினர்கள் வீட்டிற்குள் சேர்க்காமல் விரட்டியடித்துள்ளனர்". "பாரதிராஜா தன் மனதில் உள்ள உண்மைகளை யாரிடமாவது சொல்லிவிடுவாரோ என்ற அச்சத்தில், சினிமா பிரபலங்கள் யாரையுமே அவரைப் பார்க்க விடாமல் தனிமைப்படுத்தித் தடுத்துள்ளனர்" எனவும் வெங்கடேசன் கூறியுள்ளார். 300 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்துக்கள் இருந்தும், அதில் நந்தனாவின் குடும்பத்திற்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய 50 கோடி ரூபாயை கூடத் தர மறுக்கிறார்கள் என்று வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement