NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பத்ம பூஷன் விருது பெற்ற பரதநாட்டிய நாயகி ஷோபனா; அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    பத்ம பூஷன் விருது பெற்ற பரதநாட்டிய நாயகி ஷோபனா; அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
    பத்ம பூஷன் விருது பெற்ற பரதநாட்டிய நாயகி ஷோபனா

    பத்ம பூஷன் விருது பெற்ற பரதநாட்டிய நாயகி ஷோபனா; அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 28, 2025
    09:52 am

    செய்தி முன்னோட்டம்

    ஷோபனா என்ற பெயரைக் கேட்டாலே முதலில் நினைவுக்கு வருவது அவரது நடனத் திறமைதான்.

    பரதநாட்டியத்தில் சிறந்து விளங்கும் ஷோபனா, மேடையில் மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் ஆவார்.

    பரதநாட்டியத்திலும் நடிப்பிலும் நிகரற்ற ஷோபனா பல மொழிகளில் நடித்துள்ளார் மற்றும் பல நாடுகளில் தனது நடன நிகழ்ச்சிகள் மூலம் சர்வதேச புகழ் பெற்றார்.

    ஷோபனா பரதநாட்டியத்தில் முக்கிய பங்கு வகித்து மிக உயர்ந்த நிலைக்கு உயர்ந்தார். 1994 ஆம் ஆண்டில், மேலும் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக கலற்பனா என்ற பயிற்சி நிறுவனத்தைத் தொடங்கினார்.

    புதிய தலைமுறையினரிடையே நடனத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிப்பதே இவரது குறிக்கோளாகும்.

    விவரங்கள்

    நட்சத்திர நாயகி

    ஷோபனாவின் இயற்பெயர் ஷோபனா சந்திரகுமார் பிள்ளை. மார்ச் 21, 1970 இல் பிறந்த இவர், சென்னையில் உள்ள சிஷ்யா பள்ளியில் படித்தார்.

    திரையுலகில் திருவிதாங்கூர் சகோதரிகள் என்று அழைக்கப்படும் லலிதா, பத்மினி மற்றும் ராகினி ஆகியோரின் மருமகள் ஷோபனா என்பது குறிப்பிடத்தக்கது.

    சுகுமாரி, அம்பிகா சுகுமாரன், வினீத் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் அவரது நெருங்கிய உறவினர்கள் ஆவர். சிறுவயதில் ஷோபனா சித்ரா விஸ்வேஸ்வரன் மற்றும் பத்மா சுப்ரமணியம் ஆகியோரிடம் நடனப் பயிற்சி பெற்றார்.

    மலையாளப் படம் மூலம் அறிமுகமான ஷோபனா, தெலுங்கு, கன்னடம், தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து, சினிமாவில் நட்சத்திர நாயகியாக வலம் வந்தார்.

    விவரங்கள்

    ஷோபனாவின் சிறப்புகள்

    தமிழில் பொன்மன செல்வன், தளபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஷோபனா, மலையாளத்தில் மணிசித்ரதால் மற்றும் மித்ர் மை ஃப்ரெண்ட் ஆகிய படங்களில் நடித்ததற்காக தேசிய அளவில் சிறந்த நடிகையாக அங்கீகரிக்கப்பட்டார்.

    ஷோபனா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சிறப்பு அங்கீகாரம் பெற்றார்.

    பெண் என்ற தமிழ் சீரியலில் நடித்ததன் மூலம் தொலைக்காட்சி ரசிகர்களுடன் மேலும் நெருக்கமாகிவிட்டார்.

    பத்மஸ்ரீ

    ஷோபனாவுக்கு பத்மஸ்ரீ விருது

    ஷோபனா கலைத் துறையில் தனது சிறப்பான சேவைக்காக 2006இல் மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருதும், 2014 இல் கேரள அரசின் கலா ரத்னா விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

    2019 ஆம் ஆண்டில், டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார். இந்நிலையில், தனக்கு பத்ம பூஷன் விருது வழங்கிய மத்திய அரசு மற்றும் தேர்வுக் குழுவுக்கு ஷோபனா நன்றி தெரிவித்துள்ளார்.

    பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவு இல்லாமல் இந்த மரியாதை சாத்தியமில்லை என்று அவர் கூறினார்.

    அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் அனந்த நாராயணி என்ற பெண்ணைத் தத்தெடுத்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விருது
    சினிமா
    மலையாள திரையுலகம்
    நடிகைகள்

    சமீபத்திய

    இந்தியாவின் மே மாத ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் வளர்ச்சி; மத்திய நிதியமைச்சகம் தகவல் ஜிஎஸ்டி
    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை

    விருது

    ஜவான் படத்திற்காக தாதா சாஹேப் பால்கே விருதுகளை வென்ற ஷாருக்கான், நயன்தாரா நயன்தாரா
    பாலிவுட்டில் இசையமைத்த முதல் படத்திற்கே அனிருத்திற்கு கிடைத்த உயரிய விருது அனிருத்
    டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கியதை எதிர்க்கும் கர்நாடக இசைப் பாடகர்கள் விருது விழா
    பூட்டானின் உயரிய குடிமகன் விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிப்பு பூட்டான்

    சினிமா

    ஆவணப்பட சர்ச்சையில் நயன்தாராவுக்கு நடிகைகள் ஆதரவு; மௌனம் காக்கும் தனுஷ் தரப்பு நயன்தாரா
    கங்குவா மீதான ட்ரோல்களால் அதிருப்தி; நீண்ட அறிக்கை வெளியிட்ட நடிகை ஜோதிகா ஜோதிகா
    நாக சைதன்யா-சோபிதா துலிபாலா ஜோடிக்கு டிசம்பர் 4ஆம் தேதி திருமணம்; வைரலாகும் அழைப்பிதழ் திருமணம்
    ஹிந்தி மற்றும் தெலுங்கில் வெளியானது புஷ்பா 2: தி ரூல் டிரெய்லர் அல்லு அர்ஜுன்

    மலையாள திரையுலகம்

    அமலாக்கத்துறை ரேடாரில் சிக்கிய நடிகை நவ்யா நாயர் அமலாக்க இயக்குநரகம்
    மம்மூட்டி பிறந்தநாள்: இவரது இயற்பெயர் இதுவல்ல என தெரியுமா? பிறந்தநாள்
    பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும், தென்னிந்திய சினிமாவும்- ஒரு பார்வை இயக்குனர்
    ஜீவா- மம்மூட்டி நடிக்கும் யாத்ரா 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது ஜீவா

    நடிகைகள்

    'குழந்தைத் தொழிலாளர்' குறித்த குஷ்பு பதிவிட்ட ட்வீட்; ட்ரோல் செய்யும் நெட்டிஸன்கள் வைரலான ட்வீட்
    கேளடி கண்மணி புகழ் குழந்தை நடிகை நீனா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா? தமிழ் சினிமா
    இன்ஸ்டாவில் காதலனை அறிமுகம் செய்த சாய் பல்லவியின் தங்கை பூஜா திரைப்படம்
    நடிகை சாய் பல்லவியின் வீட்டில் விசேஷம்; வைரலாகும் புகைப்படங்கள் சாய் பல்லவி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025