குளிர்க் காலங்களில் சூப்கள் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
செய்தி முன்னோட்டம்
குளிர்க் காலம் வந்து விட்டாலே அனைவருக்குமே சூடாக எதையாவது குடிக்க வேண்டும் அல்லது உண்ண வேண்டும் என்று தோன்றும்.
அந்த வகையில், குளிர் நாட்களில் சூடான சூப்பை சாப்பிடுவதை பலரும் விரும்புவார்கள்.
சூப்கள் சுவைக்காக மட்டும் நாம் குடிப்பது இல்லை. அதனால் நமக்கு பல விதமான ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கிறது. கடைகளில் கிடைக்கும் சூப்களை விட, காய்கறிகளை போட்டு வீட்டில் செய்யும் சூப்களில் நன்மைகள் அதிகம்.
சில்லென்ற நாட்களில் சுடச்சுட சூப் குடித்தால், உங்கள் உடலில் உள்ள வெப்பநிலையை சீராக்கும்.
மேலும் நோய் எதிப்பு சக்தியை அதிகரிப்பதுடன், நம் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. அது என்னவென்று நாம் பின்வருமாறு பாப்போம்.
சூப்களிலுள்ள சத்துக்கள்
சூப்களில் நிறைந்துள்ள சத்துக்கள் மற்றும் அவற்றின் பலன்கள்
குளிர்க்காலத்தில் நமக்கு தேவைப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை பெற ப்ரோக்கோலி, கீரை, முட்டைகோஸ், கேரட், மஞ்சள் பூசணி போன்ற வைட்டமின் சி அதிகமுள்ள சூப்களை குடிக்கலாம்.
சளி, இருமல், போன்ற நோய்த்தொற்றுகளுக்கு சிக்கன் சூப் அருந்துவது மிகவும் நல்லது. சூப் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை அகற்றுகிறது.
குளிர்க்காலங்களில் உடலுக்கு தேவையான தண்ணீரை குடிப்பதே இல்லை. இதனால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படலாம்.
இந்த காலத்தில் திரவ உணவான சூப்களை நாம் எடுத்துக் கொள்ளுவதால் நமக்கு உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்கிறது.
கீரை சூப்கள் குடிப்பதன் மூலம் உடலுக்கு தேவையான புரதம் மற்றும் இரும்பு சத்துக்களை பெறலாம்.
இவ்வளவு நற்பயன்களை கொண்டுள்ள சூப்கள், இந்த குளிர்க்காலத்தில் நாம் அருந்த வேண்டிய சிறந்த உணவாகும்.