பென் அஃப்லெக்-ஜெனிஃபர் கார்னரின் மகள், தன்னை திருநம்பி என பொதுவெளியில் அறிவித்தார்
பிரபல ஹாலிவுட் நடிகர்களான பென் அஃப்லெக்-ஜெனிபர் கார்னரின் 15 வயது மகள் செராபினா ரோஸ், தனது தாத்தாவின் இரங்கல் பிராத்தனை கூட்டத்தின்போது, தான் ஒரு திருநர் சேர்ந்தவர் என்பதை பகிரங்கமாக பொதுவெளியில் அறிவித்தார். செராபினா, தனது பெயரை ஃபின் அஃப்லெக் என்று மாற்றிக்கொண்டதையும் அவர் தெரிவித்தார். ஏப்ரல் 6, சனிக்கிழமையன்று, மேற்கு வர்ஜீனியாவில் உள்ள சார்லஸ்டனில் உள்ள கிறிஸ்ட் சர்ச் யுனைடெட் மெதடிஸ்டில் என்ற சர்ச்சில் நடைபெற்ற இரங்கல் ஜெபகூட்டத்தில், பைபிள் வசனத்தை ஓதுவதற்கு முன், கறுப்பு நிற பேன்ட்சூட் மற்றும் buzz-cut சிகை அலங்காரம் செய்து, ஃபின் தனது அறிவிப்பை திருச்சபையினரிடையே தெரிவித்தார். நடிகர் பென் அஃப்லெக், ஜெனிஃபர் கார்னரிடம் விவாகரத்து பெற்று, தற்போது ஜெனிபர் லோபஸை மணந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபின் அஃப்லெக்
Ben Affleck and Jennifer Garner's daughter comes out as TRANS during her grandfathers funeral. Seraphina Rose, 15, announced her new boys name 'Fin' whilst appearing with her head shaved at a memorial service for her grandfather over the weekend She told the memorial service,... pic.twitter.com/GGf5DNBSIX— Oli London (@OliLondonTV) April 9, 2024