Page Loader
மட்டம் தட்டிய நிகழ்ச்சி தொகுப்பாளர், தெறிக்க விட்ட அட்லீ; வைரலாகும் வீடியோ
நிகழ்ச்சி தொகுப்பாளர், இயக்குநர் அட்லீயை பற்றி கிண்டலாகவும், உருவ கேலி செய்வது போலவும் பேசினார்

மட்டம் தட்டிய நிகழ்ச்சி தொகுப்பாளர், தெறிக்க விட்ட அட்லீ; வைரலாகும் வீடியோ

எழுதியவர் Venkatalakshmi V
Dec 16, 2024
07:25 pm

செய்தி முன்னோட்டம்

பாலிவுட் நிகழ்ச்சி தொகுப்பாளரான கபில் ஷர்மா நட்சத்திரங்களை தனது நிகழ்ச்சிக்கு வரவழைத்து அவர்களை கிண்டலடிப்பதும், அவ்வப்போது மட்டம் தட்டி பேசுவதும் தனது பாணியாக கடைபிடித்து வருகிறார். அந்த வகையில் அட்லீயின் முதல் தயாரிப்பான 'பேபி ஜான்' படத்தின் ப்ரோமோஷனிற்காக கபில் சர்மா நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது, நிகழ்ச்சி தொகுப்பாளர், இயக்குநர் அட்லீயை பற்றி கிண்டலாகவும், உருவ கேலி செய்வது போலவும் பேசினார். "நீங்கள் ஒரு நட்சத்திர நடிகரை முதலில் சந்திக்கும்போது, அவர்கள் அட்லீ எங்கே என கேட்டிருக்கிறார்களா?" என கபில் ஷர்மா கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு அட்லீ நிதானமாகவும் அதே நேரத்தில் கபில் ஷர்மாவிற்கு மூக்குடைக்கும் வகையில் பதிலளித்த விதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பதில்

எப்படி அணுகவேண்டும் என பாடம் எடுத்த அட்லீ

கபில் ஷர்மாவின் கேள்வி அட்லீ, தனது தன்னம்பிக்கையுடன் பதிலளித்து, "நான் உங்கள் கேள்வியின் அர்த்தத்தை புரிந்துகொள்கிறேன். ஆனால் தோற்றத்தை வைத்து எடையிடாமல், உள்ளத்தை வைத்து தீர்மானிக்க வேண்டும்" என்று கூறினார். அட்லீ, ஏ.ஆர்.முருகதாஸின் உதவியுடன் தனது இயக்குநர் பயணத்தை தொடங்கியதாகவும், முருகதாஸ் அவரிடம் தோற்றம் பற்றிய கேள்வி கேட்காமல், ஸ்கிரிப்ட் மீது கவனம் செலுத்தினார் என அவர் குறிப்பிட்டார். "நான் கதை சொன்ன விதம் அவருக்கு மிகவும் பிடித்துப் போனது," என்று அட்லீ மேலும் கூறினார். இந்த பதில்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, அட்லீ தன் தோற்றத்தை மையமாக வைத்து கபில் ஷர்மாவின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் தெளிவான கருத்தை வழங்கியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post