ASKC சினிமாஸ்: சென்னையில் தியேட்டர் கட்டவிருக்கும் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன், 'ரெமோ' படத்தில், சத்யம் தியேட்டர் முன்னால் நின்றுகொண்டு, "ஒரு நாள் இது போல என்னோட படத்தோட போஸ்டரும் இதே மாதிரி வரும்" எனக்கூறி இருப்பார். தற்போது அவருடைய படத்தின் போஸ்டர், அவருடைய தியேட்டரிலேயே வைக்கப்படும் அளவிற்கு அபார வளர்ச்சி அடைந்துள்ளார். ஆம், சிவகார்த்திகேயன் சென்னையில் ஒரு 'ASKC சினிமாஸ்' என்ற பெயரில், ஒரு மல்டிபிளக்ஸ் தியேட்டர் கட்டவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக ஏசியன் சினிமாஸ் என்ற நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏசியன் சினிமாஸ் ஏற்கனவே ஹைதராபாதில், தெலுங்கு நடிகர்களான அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு மற்றும் விஜய் தேவரக்கொண்டா ஆகியோருடன் இணைந்து ஒரு மல்டிப்ளக்ஸ் திறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.