Loading...
பள்ளிக்கு ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கிய பாடகர் அசல் கோலார்: பாடல்கள் மீதான விமர்சனங்களுக்கும் விளக்கம்
சேலம் அரசு உதவி பெறும் பள்ளிக்கு ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கினார் ரேப் பாடகர் அசல் கோலார்.

பள்ளிக்கு ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கிய பாடகர் அசல் கோலார்: பாடல்கள் மீதான விமர்சனங்களுக்கும் விளக்கம்

எழுதியவர் Vasuki
Oct 05, 2026
07:37 pm

செய்தி முன்னோட்டம்

தனது தனித்துவமான கானா மற்றும் ராப் பாடல்கள் மூலம் பிரபலமடைந்து, முன்னணி சுயாதீன இசைக் கலைஞராக வலம் வரும் அசல் கோலார் என்கிற வசந்தகுமார், சேலம் மரவனேரி பகுதியில் அமைந்துள்ள பாரதி வித்யாலயா அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் பள்ளியின் கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் உதவும் நோக்கில் இன்று நடைபெற்ற இந்த நன்கொடை வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அவர், பள்ளி மாணவ, மாணவிகளுடன் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் மத்தியில் தனது புகழ்பெற்ற பாடல்களைப் பாடியும், அவர்களுடன் மகிழ்ச்சியாக செல்ஃபி எடுத்துக்கொண்டும் தனது நேரத்தைச் செலவிட்டார்.

ரூ.5 லட்சம் நன்கொடை

விமர்சனங்களுக்கு அசல் கோலார் விளக்கம்

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அசல் கோலார், பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தேவைகளை அறிந்து உதவ வேண்டும் என்ற நோக்கில் தனது சொந்த நிதியிலிருந்து இந்த ரூ.5 லட்சம் தொகையை வழங்கியதாகக் குறிப்பிட்டார்.

தானும் அரசுப் பள்ளியில் படித்தவர் என்றும் அவர் தெரிவித்தார்.

தனது பாடல்கள் மீதான விமர்சனங்கள் குறித்துப் பேசிய அவர், ஒரு படைப்பு வெளிவரும்போது வரவேற்பும் விமர்சனங்களும் வருவது இயல்பானது என்றார்.

எனினும், தனது பாடல்கள் சமுதாயத்திற்குத் தீங்கானவை என்ற கருத்தை ஏற்க முடியாது என்றும், அது விமர்சிப்பவர்களின் தனிப்பட்ட பார்வை என்றும் தெரிவித்தார்.

ADVERTISEMENT