Page Loader
அருண் விஜய்- ஏமி ஜாக்சன் படத்தின் பெயர் மாற்றம்
அருண் விஜய்- ஏமி ஜாக்சன் நடிக்கும், மிஷன் சேப்டர் 1

அருண் விஜய்- ஏமி ஜாக்சன் படத்தின் பெயர் மாற்றம்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 04, 2023
03:52 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் அருண் விஜய், ஏமி ஜாக்சன் நடிப்பில், இயக்குனர் AL விஜய் இயக்கத்தில், 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தின் படப்பிடிப்பு சென்ற பிப்ரவரியில் முடிவடைந்தது. இந்த திரைப்படத்தை, SSSM என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வந்தது. இந்த படத்தின் அனேக படப்பிடிப்பு, லண்டனில் நடைபெற்றது. தற்போது அந்த படத்தின், விநியோகஸ்த உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதுமட்டுமல்ல, படத்தின் பெயரும் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த படத்தின் பெயர், 'மிஷன் சேப்டர் 1' என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு வீடியோ ஒன்றை சமீபத்தில் லைகா நிறுவனம் வெளியிட்டது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில், ஏமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

மிஷன் சேப்டர் 1