
மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் இசையமைப்பாளர் குறித்த அப்டேட்
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமா உலகில் தனக்கென ஓர் ஸ்டைல் வைத்துள்ளவர் தான் இயக்குனர் மிஷ்கின்.
இவர் இயக்குவது மட்டுமல்லாமல், நல்ல காதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தும் வருகிறார்.
'மாவீரன்' படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் பெருமளவில் பேசப்பட்டது.
இவருக்கு இசை மீதுள்ள அதீத ஆர்வம் காரணமாக, அண்மையில் இசை பயிற்சியினையும் இவர் கற்று தேர்ந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இவரது இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஓர் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என்று அறிவிப்புகள் வெளியானது.
இதற்கான படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் துவங்கும் என்றும் படக்குழு அண்மையில் அறிவித்திருந்தது.
படம்
மீண்டும் ஒரு முறை மிஷ்கினோடு கைகோர்க்கும் விஜய் சேதுபதி
தற்போது இப்படத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இதனிடையே இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த அப்-டேட் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இப்படத்தின் இசையமைப்பாளராக ஏஆர் ரஹ்மான் கமிட்டாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'பிசாசு' படம் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில், இதன் 2ம் பாகம் எடுக்கப்பட்டது.
இதில் விஜய் சேதுபதி-ஆண்ட்ரீயா நடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதி, மிஷ்கினோடு புது படத்தில் கைகோர்த்துள்ளார்.
'பிசாசு 2' திரைப்படம் சில காரணங்களால் இன்னமும் வெளியிடப்படாமல் உள்ளது.