
துருவ் விக்ரமின் புதிய படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
செய்தி முன்னோட்டம்
'சீயான்' விக்ரமின் மகன் துருவ் விக்ரம். 'ஆதித்யா வர்மா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர்.
அந்த திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்றாலும், துருவ் விக்ரமின் நடிப்பு பலரையும் கவர்ந்தது.
இதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், 'மகான்' திரைப்படத்தில், தனது தந்தை விக்ரமுடன் நடித்திருந்தார். எனினும் படம் நேரடி OTT தளத்தில் வெளியானதால், அதன் வசூல் நிலவரம் தெரியவில்லை.
படத்தேர்வுகளில் கவனமாக அடியெடுத்து வைக்கும் துருவ், அடுத்ததாக 'டாடா' படத்தை இயக்கிய கணேஷ் கே பாபுவுடன் இணைகிறார் என செய்திகள் வெளியானது.
இந்த புதிய படத்திற்கு இசையமைக்கவிருப்பது, ஏ.ஆர்.ரஹ்மான் எனவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், இந்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
ட்விட்டர் அஞ்சல்
துருவ் விக்ரம் - ரஹ்மான் கூட்டணி
🔹️#ARRahman To Score Music For #DhruvVikram Next 🎶
— Dinesh (@Dinesh16423413) July 6, 2023
🔸️Directed By: #GaneshKBabu (Dada) 🎬 pic.twitter.com/evFvFwUxkp