
'ராமாயணம்' திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருது வென்ற ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து பணியாற்றும் நம்ம ஆஸ்கார் நாயகன் ARR
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரியின் வரவிருக்கும் "ராமாயணம்" படத்திற்கான ஒலிப்பதிவை உருவாக்க ஏ.ஆர்.ரஹ்மானும், ஹான்ஸ் ஜிம்மரும் இணைந்து பணியாற்றுகிறார்கள். இந்த செய்தி படத்தின் கேரக்டர் ரிவீல் வீடியோவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது குறித்து இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மனம் திறந்துள்ளார். இரண்டு முறை ஆஸ்கார் விருதையும், ஐந்து முறை கிராமி விருதையும் வென்ற ஜிம்மருடன் பணியாற்றுவதில் தான் எவ்வளவு பெருமைப்படுகிறேன் என்று ரஹ்மான் பகிர்ந்து கொண்டார். "ராமாயணம் போன்ற ஒரு திட்டத்தில் ஹான்ஸ் ஜிம்மருடன் நான் இசையமைப்பேன் என்று யார் கற்பனை செய்திருப்பார்கள் ?" என அவர் பெருமை பொங்க கூறியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு பாகம்
'ராமாயணம்' இரண்டு பாகங்களாக வெளியாகிறது
லண்டன், LA மற்றும் துபாய் முழுவதும் தங்கள் படைப்பு அமர்வுகள் நடந்ததாக ரஹ்மான் வெளிப்படுத்தினார். ஜிம்மர் உலகளாவிய ஒலிகளை இந்திய தாக்கங்களுடன் ஒலியமைக்க, இசைக்கோர்வை பிரமாண்டமாக புதிய அனுபவமாக இருக்கும் என்றார் ARR. "ராமாயணம்" திரைப்படம், 2026 மற்றும் 2027 தீபாவளியின் போது இரண்டு பகுதிகளாக வெளியிடப்படும். நடிகர்கள் குழுவில் ராமராக ரன்பிர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யாஷ், அனுமனாக சன்னி தியோல் மற்றும் லட்சுமணனாக ரவி துபே ஆகியோர் நடிக்கின்றனர். இந்திய கலாச்சாரத்தில் வேரூன்றிய ஒரு இதிகாசத்தை பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆர்வத்தோடு உள்ளனர்.