Page Loader
'காதலுக்கு மரியாதை': மனைவியை ட்ரோல் செய்த கஸ்தூரிக்கு, ஏ.ஆர்.ரஹ்மானின் தரமான பதில்
மனைவியை கிண்டலடித்த கஸ்தூரிக்கு, ஒரு வரியில் பதில் கூறி, வாயடைத்தார் ஏ.ஆர். ரஹ்மான்

'காதலுக்கு மரியாதை': மனைவியை ட்ரோல் செய்த கஸ்தூரிக்கு, ஏ.ஆர்.ரஹ்மானின் தரமான பதில்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 28, 2023
09:51 am

செய்தி முன்னோட்டம்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சமீபத்தில் ஒரு பிரபல தனியார் ஊடகம் விருது வழங்கி கௌரவித்தது. அதை தனது மனைவியுடன் வந்து பெற்றுக்கொண்டார் ரஹ்மான். அப்போது, ரஹ்மானின் மனைவியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கும்போது, "ஹிந்தில பேசாதீங்க தமிழ்ல பேசுங்க" எனக்கூறினார். அதை சிரித்துக்கொண்டே ஆமோதித்த அவரின் மனைவி, "எனக்கு தமிழ் கோர்வையாக பேச வராது" என ஆங்கிலத்தில் பேசினார். பலரும் ரஹ்மான் கூறியதை பாராட்டி கொண்டிருந்தவேளையில், நடிகை கஸ்தூரி, "என்னது ஆர் ரஹ்மான் அவர்களின் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய் மொழி என்ன? வீட்டுல குடும்பத்தில என்ன பேசுவாங்க?" என கமெண்ட் அடித்தார். அது ரஹ்மானின் கவனத்திற்கு வர, அவரோ, "காதலுக்கு மரியாதை" என ஒரேவரியில் நச்சென்ற பதிலடி தந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

கஸ்தூரியின் சர்ச்சையான ட்வீட் 

ட்விட்டர் அஞ்சல்

ரஹ்மானின் பதிலடி

ட்விட்டர் அஞ்சல்

மனைவியை கிண்டலடித்த ரஹ்மான்