Page Loader
தொடர்ந்து 'தக் லைஃப்' படத்தில் இணையும் பொன்னியின் செல்வன் நட்சத்திரங்கள்
'தக் லைஃப்' படத்தில் இணையும் பொன்னியின் செல்வன் நட்சத்திரங்கள்

தொடர்ந்து 'தக் லைஃப்' படத்தில் இணையும் பொன்னியின் செல்வன் நட்சத்திரங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 11, 2024
07:44 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் இணையும் திரைப்படம் 'தக் லைஃப்'. படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்தில், கமல்ஹாசனுடன், துல்கர் சல்மான், திரிஷா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கூடுதலாக ஜெயம் ரவியும் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது. கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில், ஜெயம் ரவி மற்றும் திரிஷா, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்த சூழலில் மற்றுமொரு பொன்னியின் செல்வன் நடிகை இந்த படத்தில் இணைந்துள்ளார் என இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, ஐஸ்வர்யலக்ஷ்மி இந்த படத்தில் இணைகிறார். கூடுதலாக இந்த படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக்கும் நடிக்கிறார். இதை அவரே நேற்று தெரிவித்திருந்தார்

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post