
ஒரு வாரத்திற்குள், மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் மீண்டும் விபத்து
செய்தி முன்னோட்டம்
விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மார்க் ஆண்டனி'. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது EVP சிட்டியில் நடைபெற்று வருகிறது.
சென்ற வாரம் ஏற்பட்ட மிகப்பெரிய விபத்தில் இருந்து அதிர்ஷ்ட வசமாக, விஷாலும், SJ சூர்யாவும் உயிர் தப்பிய நிலையில், இந்த படப்பிடிப்பு தளத்தில் மற்றுமொரு விபத்து நிகழ்ந்துள்ளது.
அதில், லைட் கம்பம் அறுந்து விழுந்து, லைட்ஸ்மேன் ஒருவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது எனவும், அதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்ற பிப்.,22 -ஆம் தேதி, இது போல ஒரு விபத்து நிகழ்ந்தது. சண்டை காட்சியொன்றில், விஷால் உள்ளிட்ட நடிகர்கள் நின்றிருந்த இடத்தை நோக்கி கட்டுப்பாட்டை இழந்த டிரக் ஒன்று மோதியது. அதிர்ஷ்டவசமாக, அவர்கள் அனைவரும் காயமின்றி தப்பினர்.
ட்விட்டர் அஞ்சல்
மீண்டும் விபத்து!
#JUSTIN | விஷால் படப்பிடிப்பில் மீண்டும் விபத்து
— Thanthi TV (@ThanthiTV) February 28, 2023
ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்றுவரும் நடிகர் விஷாலின் 'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பில் மீண்டும் விபத்து
லைட்மேன் தலையில் லைட் கம்பம் விழுந்து நெற்றியில் காயம் - மருத்துவமனையில் அனுமதி#Chennai #vishal #markantony pic.twitter.com/HghBquJdAV
திரைப்படம்
திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ வேண்டி RK செல்வமணி கோரிக்கை
இரு தினங்களுக்கு முன்னர் தான், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'திரைப்படத்துறையில் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து ஆபத்தான, சிரமமான நிலையிலேயே இருந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் திரைப்படத் துறைக்கு செய்யும் உதவிகள் மேலோட்டமாகவே நின்று விடுகின்றன".
"இதுவரை திரைப்படத்துறையில் பணிபுரியும்போது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்கள் குடும்பங்களை காப்பாற்ற எந்த வழியும் இல்லை. ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் பணிபுரியும்போது இறந்தால் மட்டுமே அவர்களுக்கு ஏதோ ஒரு உதவி கிடைக்கிறது. ஆனால் சிரமப்பட்டு திரைப்படம் தாயாரிக்கின்ற சிறு தயாரிப்பாளர்களின் படங்களில் பணிபுரியும்போது விபத்து ஏறபட்டால் அவர்களை காப்பாற்ற எந்த நாதியுமில்லை", எனக்குறிப்பிட்டிருந்தார்.
இவரின் கோரிக்கையை ஏற்று A.R.ரஹ்மான், சென்னையில் இசைக்கச்சேரி நடத்தப்போகிறார்.