லியோ ஃபீவர்- 'லியோ' திரைப்படம் குறித்து ட்வீட் செய்த அனிருத்
அக்டோபர் 19ஆம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் லியோ திரைப்படத்திற்காக ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் வெறியோடு காத்துக்கொண்டுள்ளனர். லியோ திரைப்படத்தில் விஜயுடன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளுமே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளரான அனிருத் பதிவிட்டுள்ள ட்விட்டில், "லாக்டு & லோடட்" , "லியோ ஃப்ரம் அக்டோபர் 19" என பதிவிட்டு இருந்தார். மேலும் படத்தின் கதாநாயகியான திரிஷாவும் ட்விட்டரில், படத்தின் போஸ்டரை பதிவிட்டு "ரெடியா ஆ" என கேட்டிருந்தார்.