
புரூக்ளின் நைன்-நைன், ஹோமிசைட் சீரிஸ்களில் நடித்த ஆண்ட்ரே ப்ராகர் 61 வயதில் மரணம்
செய்தி முன்னோட்டம்
புரூக்ளின் நைன்-நைன் மற்றும் ஹோமிசைட்: லைஃப் ஆன் தி ஸ்ட்ரீட்டின் ஆகிய புகழ்பெற்ற ஹாலிவுட் சீரிஸ்களில் நடித்த ஆண்ட்ரே ப்ராகர், உடல் நலக்குறைவால் 61 வயதில் காலமானார்.
ப்ராகர் தனது கலை வாழ்க்கையில் நகைச்சுவை மற்றும் அதிரடியான வேடங்களில், போலீசாக நடித்ததற்காக புகழ்பெற்றவர்.
ஹோமிசைடு மற்றும் தீப் ஆகியவற்றில் நடித்ததற்காக, இரண்டு எம்மி விருதுகளை வென்றுள்ள இவர், இதுவரை 11 முறை எம்மி விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
அவர் 1998 இல் ஹோமிசைட்: லைஃப் ஆன் தி ஸ்ட்ரீட் சீரிஸில் நடித்ததற்காகவும், 2006 ஆம் ஆண்டில் திருட்டுக் குழுவின் தலைவராக நடித்த தீப் படத்திற்காகவும் எம்மி விருதுகளை வென்றார்.
மேலும் இவர், ப்ரைமல் பியர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
புரூக்ளின் நைன்-நைனில் ஆண்ட்ரே ப்ராகர் நடித்த சிறந்த காட்சிகள்
Andre Braugher was an absolute treasure as Captain Holt on Brooklyn Nine-Nine. RIP🕊️ pic.twitter.com/s0zQ3N2xQD
— vids that go hard (@vidsthatgohard) December 13, 2023