'இனத்தின் அடையாளத்தை அழிக்கும் முயற்சி': நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு
நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சீரிஸ் ஒன்றில், தன் இனத்தின் அடையாளத்தை அழிக்கும் முயற்சியாக நடிகைகளை தேர்வு செய்துள்ளனர் என ஒரு வழக்கறிஞர், அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். எகிப்து அரசி கிளியோபாட்ரா குறித்து ஒரு அவணப்படத்தை எடுத்து வருகிறது நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம். ஆனால், அதில், முன்னணி கதாபாத்திரத்திரமான கிளியோபாட்ரா கதாபாத்திரத்தில், ஒரு ஆப்பிரிக்கா நடிகை நடிக்கிறார். தற்போது அதுதான் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. ராணி கிளியோபாட்ராவின் நிறமோ, முடியோ, ஆப்பிரிக்க இன மக்களை ஒத்திருக்காது என பலரும் கண்டனங்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து, இதை கண்டித்து, எகிப்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இணையத்திலும், இதை சார்ந்து பல கண்டன குரல்கள் எழுந்துள்ளது.