Loading...
83 வயதில் அமிதாப் பச்சனுக்கு திடீர் அறுவைசிகிச்சை; ICU சிகிச்சைக்கு பின் ஹெல்த் அப்டேட்
அமிதாப் பச்சனுக்கு திடீர் அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது

83 வயதில் அமிதாப் பச்சனுக்கு திடீர் அறுவைசிகிச்சை; ICU சிகிச்சைக்கு பின் ஹெல்த் அப்டேட்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 21, 2026
02:52 pm

செய்தி முன்னோட்டம்

மூத்த நடிகரான அமிதாப் பச்சன் (83), தனக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவைசிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளதாகவும், மருத்துவமனையை விட வீட்டில் குணமடையும் இந்தக் காலக்கட்டமே மிகவும் சவாலானது என்றும் தனது பிளாக் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜூலை 21 அதிகாலையில் வெளியிட்ட அந்தப் பதிவில், தான் எந்தக் காரணத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் அல்லது என்ன விதமான அறுவைசிகிச்சை செய்யப்பட்டது என்பது குறித்த விவரங்களை அவர் குறிப்பிடவில்லை.

பதிவு

"வீடு திரும்பிய பின் தொடங்கும் கடினமான கட்டம்"

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியது குறித்து அமிதாப் பச்சன், "திறமையான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் தீவிர கண்காணிப்பில், ICU பிரிவில் அறுவைசிகிச்சை முடிந்து.. டிஸ்சார்ஜ் ஆகி.. வீட்டிற்குத் திரும்புவது.. இந்த வீடு திரும்பும் காலக்கட்டமே உடலளவிலும், மனதளவிலும் மற்றும் நடைமுறையிலும் மிகவும் கடினமான கட்டமாகும்." என் எழுதியுள்ளார்.

எவ்வளவு பெரிய சவால்களையும் சாதனைகளையும் கடந்து வந்த ஒரு சாம்பியனாக இருந்தாலும், வாழ்வின் ஏதேனும் ஒரு தருணத்தில் தோல்வியையும் பலவீனத்தையும் எதிர்கொள்ள நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சவால்

"ஒவ்வொருவரின் அணுகுமுறையும் வேறுபடும்"

சவாலான சூழல்களை எதிர்கொள்வது குறித்து அவர் பேசுகையில், "சிலர் துணிச்சலுடன் போராடி மீண்டும் சாம்பியனாக மிளிருவார்கள். சிலர் சூழ்நிலையை ஏற்றுக்கொண்டு பழைய நினைவுகளுடன் வாழ்வார்கள். இதில் எதுவுமே தவறில்லை, அது அவரவர் தனிப்பட்ட விருப்பம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 83 வயதிலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் அமிதாப் பச்சன், தான் நலமாக மீண்டு வருவதாகவும், ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அமிதாப் பச்சன் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT