Page Loader
லண்டனில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மெழுகு சிலை
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மெழுகு சிலை

லண்டனில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மெழுகு சிலை

எழுதியவர் Venkatalakshmi V
Sep 19, 2023
05:36 pm

செய்தி முன்னோட்டம்

தென்னிந்தியாவின் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன். தெலுங்கு படங்களில் நடித்து வரும் அல்லு அர்ஜுன், கடைசியாக நடித்த 'புஷ்பா' திரைப்படம். இந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு திரையுலகில், தேசிய விருது வென்ற முதல் நடிகர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இந்த நிலையில், அல்லு அர்ஜுனுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக, பிரபல மெழுகு அருங்காட்சியகமான மேடம் டுசாட்ஸில் ஒரு சிலை நிறுவப்படவுள்ளது. லண்டனில் இருக்கும் அந்த அருங்காட்சியகத்தில், தென்னிந்தியாவிலிருந்து, மகேஷ் பாபு, பிரபாஸ் போன்ற நடிகர்கள் வரிசையில் மூன்றாவது நடிகராக இடம்பெறவுள்ளார் அல்லு அர்ஜுன். இந்த மெழுகு அருங்காட்சியகத்தில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்ற திரை நட்சத்திரங்களின் மெழுகு சிலைகளும் உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

அல்லு அர்ஜுனுக்கு மெழுகு சிலை