மகள் ராஹாவை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தினர் ரன்பிர் கபூர் -ஆலியா பட் தம்பதியினர்
பாலிவுட்: ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர் தங்களது மகள் ராஹாவின் முகத்தை முதல்முறையாக வெளி உலகிற்கு காட்டிள்ளனர். பிரபல பாலிவுட் நடிகர்களான ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர், பல வருட காதலுக்கு பின் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு கடந்த வருடம் நவம்பர் 6ஆம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. ராஹா கபூர் என்று தங்கள் மகளுக்கு பெயரிட்ட அந்த பிரபல தம்பதியினர், ஒரு வருடத்திற்கும் மேலாக தங்களது மகளின் முகத்தை வெளி உலகிற்கு காட்டாமல் வைத்திருந்தன்ர். இந்நிலையில், இன்று கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி கொண்டாட்டத்திற்காக வெளியே சென்றிருந்த அந்த தம்பதியினர், செய்தியாளர்கள் முன்னிலையில் தங்களது மகளை உலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்தனர்.