
AK 62: அஜித் - மகிழ் திருமேனி இணையும் 'விடாமுயற்சி'
செய்தி முன்னோட்டம்
இன்று நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, நீண்ட நாட்களாக காக்கவைக்கப்பட்ட AK 62 படத்தின் தலைப்பையும், மற்ற விவரங்களையும் வெளியிட்டது, படத்தின் தயாரிப்பாளரான லைகா நிறுவனம்.
அஜித் நடிப்பில் வெளியான 'துணிவு' படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, அதே போல மாஸ் படத்தை தயாரிக்க எண்ணியது லைகா நிறுவனம்.
இதற்காக விக்னேஷ் சிவன் எழுதிய கதை பிடிக்காமல் போகவே, அவரை நீக்கிவிட்டு, மகிழ் திருமேனியை இயக்குனராக தேர்வு செய்ததாக பேச்சு எழுந்தது.
இருப்பினும், அது குறித்து அதிகார பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடாமல், ரசிகர்களை குழப்பத்திலேயே வைத்திருந்தது அந்நிறுவனம்.
தற்போது, அஜித்குமாரின் பிறந்தநாள் பரிசாக, இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.
'விடாமுயற்சி' படத்திற்கு இசையமைக்கவிருப்பது, அனிருத், படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
படத்தின் டைட்டில் போஸ்ட்டரை பகிர்ந்த இயக்குனர்
Dream Come True Moment! Kandippa Cult Sambavama Irukum ❤️#VidaaMuyarchi "EFFORTS NEVER FAIL" #HBDAjithKumar Sir pic.twitter.com/a4MWzUTZOb
— Magizh Thirumeni (@MagizhDirector) April 30, 2023