அஜித்தின் விடாமுயற்சி படத்தில் கணேஷ் சரவணன் மற்றும் தசரதியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
அஜித்குமார் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் போஸ்டர்களை ஒரு குறிப்பிட்ட இடைவேளையில் படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தில் நடித்தவர்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என அஜித் குமார் கேட்டுக்கொண்டதாகவும், அதனால் அனைத்து கதாபாத்திரங்களையும் முன்னணி கதாபாத்திரத்தை போலவே போஸ்டர் வடிவில் அறிமுகம் செய்து வருகின்றனர் படக்குழுவினர். இந்த நிலையில் இன்று, நடிகர்கள் கணேஷ் சரவணன் மற்றும் தசரதியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. துணிவுக்குப் பிறகு அஜித்துடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக தாசரதி இணைந்துள்ள படம் விடாமுயற்சி. இவர்களுடன் முக்கிய வேடங்களில் அர்ஜுன் சர்ஜா, த்ரிஷா கிருஷ்ணன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் மற்றும் நிகில் நாயர் ஆகியோரும் நடித்துள்ளனர்.