
டிக்கெட் முன்பதிவில் சாதனை: வெளியீட்டிற்கு முன்பே தமிழ்நாட்டில் ₹28.46 கோடி வசூலித்த அஜித்தின் 'குட் பேட் அக்லி'
செய்தி முன்னோட்டம்
நடிகர் அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' நாளை வெளியாக உள்ளது.
இதற்கான டிக்கெட் முன்பதிவுகள் தமிழ்நாட்டில் ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில், டிக்கெட் விற்பனை சாதனை புரிந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர் சினெட்ராக்கின் கூற்றுப்படி, குட் பேட் அக்லி, ப்ரீ-புக்கிங் விற்பனையிலிருந்து தமிழ்நாட்டில் ₹28.46 கோடியைப் பதிவு செய்துள்ளது.
ஒப்பிடுகையில், லியோ (₹48.28 கோடி), தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (₹39.54 கோடி), ஜெயிலர் (₹33.05 கோடி), மற்றும் விடாமுயர்ச்சி (₹29.01 கோடி) போன்ற சமீபத்திய பெரிய படங்களின் T-1 வார இறுதி முன்பதிவுகளின் வசூல் சாதனையில் Good Bad Ugly திரைப்படமும் இடம்பெற்றுள்ளது.
விவரங்கள்
குட் பேட் அக்லி படத்தின் குழு விவரங்கள்
குட் பேட் அக்லி படத்தில் அஜித் உடன் த்ரிஷா, சிம்ரன், அர்ஜுன் தாஸ், ராகுல் தேவ், கிங்ஸ்லி, கேஜிஎஃப் அவினாஷ், யோகி பாபு, பிரசன்னா, பிரபு, பிரியா பிரகாஷ் வாரியார், சாயாஜி ஷிண்டே, ஜாக்கி ஷ்ராஃப் மற்றும் சுனில் ஆகியோர் முக்கிய துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்கியுள்ளார்.
நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் தயாரித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய, சுப்ரீம் சுந்தர் மற்றும் கலோயன் வோடெனிச்சரோவ் சண்டைக்காட்சிகளை இயக்குகின்றனர்.
அனு வர்தன் மற்றும் ராஜேஷ் கமர்சு ஆடை வடிவமைப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.