ரூ.100 கோடி ஃபைனான்ஸ் விவகாரம்: டேர்டெவில் படத்தால் நடிகர் அஜித்திற்கு நிதி நெருக்கடியா?
செய்தி முன்னோட்டம்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உடனடியாக அடுத்த படத்தில் நடிக்காமல் கார் பந்தயங்களில் தீவிர கவனம் செலுத்தி வந்த அஜித், தனது அடுத்த திரைப்படத்தைச் சொந்த தயாரிப்பிலேயே தயாரிக்கத் திட்டமிட்டார். குட் பேட் அக்லி படத்தின் வெற்றிக் கூட்டணியான இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் கைகோர்த்து, இப்படத்திற்கு டேர்டெவில் எனப் பெயரிடப்பட்டு அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.
பைனான்ஸ் நிபந்தனை
படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்குமா?
அஜித் குமார் முதன்முறையாகத் தயாரிக்கும் டேர்டெவில் திரைப்படத்தின் தயாரிப்புச் செலவுகளுக்காக, பிரபல பைனான்சியரிடம் படக்குழு தரப்பில் சுமார் ரூ.100 கோடி கடன் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதற்கு அவர் ஐந்து மாத வட்டியை முன்கூட்டியே பிடித்தம் செய்ய நிபந்தனை விதித்ததால் அஜித் மிகுந்த அதிர்ச்சியடைந்தார்.
இதுவரை நடிகராக மட்டுமே இருந்துவிட்டு தற்போது தயாரிப்பில் களமிறங்கியுள்ளதால், ஒரு தயாரிப்பாளரின் உண்மையான கஷ்டங்களும் நடைமுறைச் சவால்களும் இப்போதுதான் அவருக்குத் தெரியவரும் என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிதிச் சிக்கல் மற்றும் வட்டிப் பிடித்தம் காரணமாக, திட்டமிட்டபடி அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குமா அல்லது தள்ளிப்போகுமா என்ற சந்தேகம் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது படக்குழுவினர் மாற்று வழிகளை ஆலோசித்து வருகின்றனர்.