
'டப்பா நடிகை' பற்றிய தனது கருத்து குறித்து நடிகை சிம்ரன் தற்போது விளக்கம்
செய்தி முன்னோட்டம்
சமீபத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில், நடிகை சிம்ரன், 'Aunty வேடங்களில்' நடித்ததற்காக ஒரு சக நடிகை தன்னை விமர்சித்த விதம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது எனக்கூறினார்.
இது யாரை குறிக்கிறது என்ற விமர்சனம் இணையத்தில் வைரலாக விவாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த சர்ச்சையை குறித்து அவர் மனம் திறந்துள்ளார்.
"என் சக நடிகை ஒருவரிடம் சமீபத்தில் ஒரு மெசேஜ் அனுப்பினேன். ஒரு கதாபாத்திரத்தில் அவரை பார்த்ததில் ஆச்சரியமாக இருந்தது என்று தெரிவித்தேன். அதற்கு அவர் 'ஆன்ட்டி ரோல்களில் நடிப்பதைவிட இது பரவாயில்லை' என்று பதிலளித்தார். அந்த பதில் மிகவும் பொறுப்பற்றது. அதுபோன்ற பதிலை அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை" என அவர் அந்த விருது விழாவில் பேச இருந்தார்.
விளக்கம்
தனது கருத்திற்கு விளக்கம் அளித்த சிம்ரன்
திரைப்பட விருது விழாவில் தனது சக நடிகை தன்னை விமர்சனம் செய்ததைப் பற்றி தெளிவுபடுத்திய சிம்ரன்,"அப்போது நான் மிகவும் வருத்தப்பட்டேன். அதனால், என் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டேன். அவ்வளவுதான். என் தொழில் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே நான் ஆன்ட்டி வேடங்களில் நடித்து வருகிறேன். ஆன்ட்டி வேடங்களில் நடிப்பது மோசமான விஷயம் அல்ல."
இருப்பினும், இந்த சம்பவம் தனக்கு மோசமான அனுபவத்தை தந்ததாகவும், பெண் நட்சத்திரங்கள் நண்பர்களாக இருக்க முடியாது என்று புரிய வைத்ததாகவும் சிம்ரன் ஒப்புக்கொள்கிறார்.
அவர்,"நண்பர்கள் உங்களை காயப்படுத்தும்போது அது மிகவும் வேதனையாக இருக்கிறது. அந்த நபர் மறுநாள் என்னிடம் பேசினார் - அது சங்கடமாக இல்லை, ஆனால் உறவு பழையபடி இருக்காது."
சிம்ரனின் பேச்சு
சிம்ரன் பேசியது விவாத பொருள் ஆனது ஏன்?
"என் சக நடிகை ஒருவரிடம் சமீபத்தில் ஒரு மெசேஜ் அனுப்பினேன். ஒரு கதாபாத்திரத்தில் அவரை பார்த்ததில் ஆச்சரியமாக இருந்தது என்று தெரிவித்தேன். அதற்கு அவர் 'ஆன்ட்டி ரோல்களில் நடிப்பதைவிட இது பரவாயில்லை' என்று பதிலளித்தார். அந்த பதில் மிகவும் பொறுப்பற்றது".
"அதுபோன்ற பதிலை அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. 'ஆன்ட்டி' ரோல்களில் நடிப்பதில் தவறில்லை. 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில், 25 வயதில் அம்மா வேடத்தில் நடித்துள்ளேன். இது 'டப்பா' கதாபாத்திரங்களுக்கு மேல். நம்முடைய தேர்வுகளில் நம்பிக்கை இருக்க வேண்டும்."என்று சிம்ரன் கூறினார்.
"நான் இதற்கு தகுதியானவன் அல்ல; இந்த இடத்தை யாருடைய சிபாரிசும் இன்றி நானே சம்பாதித்தேன்.... எந்த வேடமாக இருந்தாலும் சரி. அது என் விருப்பம், அது எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளது."