
நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்? சண்டிகர் தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் முடிவாகியதாக தகவல்
செய்தி முன்னோட்டம்
பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகையான திரிஷா, விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. Siasat.com-ன் அறிக்கையின்படி, அவரது வீட்டில், அவரது காதலுக்கு சம்மதம் தெரிவித்ததுடன், திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். திரிஷாவை திருமணம் செய்துகொள்ளவிருக்கும் நபர் சண்டிகரை சேர்ந்த ஒரு தொழிலதிபர் என்று மட்டுமே தற்போது விவரங்கள் தெரிய வந்துள்ளன. இரு குடும்பங்களும் பல ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் நெருக்கமாக தெரிந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக ஒரு பேட்டியில் திருமணம் குறித்து பேசும்போது, சரியான நபரைக் கண்டுபிடித்தால் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறியதாகவும், ஆனால் "சரியான நேரம் இன்னும் வரவில்லை" என்றும் கூறியதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
முந்தைய நிச்சயதார்த்தம்
த்ரிஷாவின் முந்தைய நிச்சயதார்த்தமும், காதல் வதந்திகளும்
கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகை த்ரிஷாவுக்கும், தொழிலதிபர் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. எனினும், விரைவில் தங்கள் உறவை முறித்துக் கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடரும் முடிவில் த்ரிஷாவுக்கும் வருணுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவே உறவு முறிந்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே நடிகர் விஜய்க்கும், த்ரிஷாவுக்கும் காதல் மலர்ந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இருவரும் திரையில் மிகவும் விரும்பட்ட ஜோடியாக இருந்ததும் இந்த வதந்திக்கு காரணமாக மாறியது. நடிகை த்ரிஷா கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசனுடன் 'தக் லைஃப்' படத்தில் நடித்திருந்தார்.