சினிமாவை பற்றி மனம் திறந்து பேசியுள்ள நடிகை தமன்னா
செய்தி முன்னோட்டம்
கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் நடிகை தமன்னா.
தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் ,கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து திரையுலகில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றவர்.
15 வயதிலேயே சினிமாவிற்கு நுழைந்த இவர் பல வெற்றி படங்களை கொடுத்தவர்.
இவர் தனது திரையுலக அனுபவத்தை சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் " எந்த துறையிலும் நினைத்ததை உடனே அடைந்து விட முடியாது. அதற்கான நேரம் வரவேண்டும். நம் வேலைகளை மனப்பூர்வமாக செய்து கொண்டு காத்திருக்க வேண்டும்.
சினிமாவில் என் ஆரம்ப நிலையை விட இப்போது கிடைக்கும் கதாபாத்திரங்கள் எனக்கு மனதிருப்தியை தருகின்றன.
தொடக்கத்திலேயே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து திறமையை காட்ட ஆசைப்பட்டால் அது அனைவருக்கும் சாத்தியமாகாது" என கூறியுள்ளார்.
தமன்னாவின் பேட்டி
திரையுலகில் சாதித்து விட்டேன் என்ற திருப்தி இருக்கிறது - தமன்னா
மேலும் அவர் கூறியதாவது, "அதனால் தான் சினிமாவிற்கு வந்த ஆரம்பக்காலங்களில் நான் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிப்பது குறித்து யோசிக்கவில்லை.
எனக்கான சரியான நேரத்திற்காக காத்திருந்தேன். கிடைத்த கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை யோசிக்காமல், கிடைத்த கதாபாத்திரத்தை கொண்டு ரசிகர்களை எப்படி கவர வேண்டும். மற்றும் அவர்கள் மனதில் இடம் பிடிப்பது எப்படி என்று யோசித்தேன்.
கமர்சியல் படங்களில் நடித்து கொண்டே திரையுலகை நேசிப்பவர்களும் என்னை பற்றி பேசும்படி செய்தேன்.
இது தான் நான் சாதித்த சிறந்த லட்சியம். எனக்கு பிடித்த கதாபாத்திரங்ளை தேர்வு செய்யும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது.
வலுவான முக்கிய கதாபாத்திரங்கள் கிடக்கின்றன. இந்த பயணம் எனக்கு இப்போது மகிழ்ச்சியை தருகிறது. திரையுலகில் சாதித்து விட்டேன் என்ற திருப்தி இருக்கிறது" என அவர் கூறியுள்ளார்.