நடிகை சுனைனா காதலிப்பது இவரைத்தான்! பிறந்தநாள் செல்ஃபி மூலம் உறவு உறுதி
செய்தி முன்னோட்டம்
பிரபல UAE சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர் காலித் அல் அமெரி உடனான காதலை சமீபத்தில் வெளியான இன்ஸ்டா புகைப்படம் மூலம் உறுதி செய்துள்ளார் நடிகை சுனைனா. நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்த இந்த 'காதல்' வதந்திகளுக்கு காலித்தின் பிறந்தநாள் பதிவு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கடந்த டிசம்பர் 6, 2025 அன்று காலித் அல் அமெரி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அந்த பதிவின் கடைசிப் புகைப்படமாக, சுனைனாவுடன் சேர்ந்து எடுத்த கண்ணாடி செல்ஃபி (Mirror Selfie) ஒன்றை அவர் வெளியிட்டார். அந்த செல்ஃபியில் இருவரும் நெருக்கமாக நின்று கைகோர்த்தவாறு போஸ் கொடுத்திருந்தனர். இதன் மூலம் தங்கள் உறவை வெளிப்படையாக உறுதிப்படுத்தினர்.
பின்னணி
பல நாட்களாக சமூக வலைத்தளத்தில் அடிபட்டு வந்த இவர்களில் டேட்டிங் வதந்தி
"A beautiful night to remember" என்று குறிப்பிட்டு, சுனைனாவையும் அந்தப் பதிவில் காலித் டேக் செய்திருந்தார் இந்த உறுதிப்படுத்தலுக்கு முன்னரே, கடந்த சில மாதங்களாக இருவரும் டேட்டிங் செய்வதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. எனினும் இது குறித்து இருவரும் வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்தனர். காலித் அல் அமெரி முன்பு சலாமா முகமது என்பவரை திருமணம் செய்திருந்தார். அவர்கள் இருவருக்கும் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரியில் விவாகரத்து முடிவானது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் சுனைனா, தமிழ் மற்றும் தெலுங்கு வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் ஷூட்டிங் இல்லாத பெரும்பான்மையான நேரங்களை துபாயில் செலவிட்டு வருகிறார்.