"இனி நான் டாக்டர் ஸ்ரீலீலா!"; ஷூட்டிங் ஸ்பாட்டிலும் படித்து மருத்துவ பட்டம் வென்ற சிவகார்த்திகேயன் பட நடிகை
செய்தி முன்னோட்டம்
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா, திரையில் மின்னியது மட்டுமின்றி, தற்போது நிஜ வாழ்க்கையிலும் ஒரு மாபெரும் சாதனையை படைத்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக நடிப்பு மற்றும் மருத்துவ படிப்பு என இரண்டையும் சமமாக நிர்வகித்து வந்த அவர், தற்போது அதிகாரப்பூர்வமாக மருத்துவப் பட்டம் பெற்றுள்ளார். மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஸ்ரீலீலா தனது மருத்துவப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். கருஞ்சிவப்பு நிறப் பட்டமளிப்பு அங்கி அணிந்து அவர் மேடையில் பட்டம் வாங்கும் புகைப்படங்களும், தனது தோழிகளுடன் சேர்ந்து 'ஹிப்போக்ரடிக்' (Hippocratic Oath) உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பட்டம் பெற்றவுடன் தனது குடும்பத்தினரை கட்டிப்பிடித்து அவர் நெகிழ்ந்த தருணம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Actress #SreeLeela has officially graduated and completed her medical degree ❤️
— Ayyappan (@Ayyappan_1504) February 11, 2026
Balancing academics and cinema at such a young age 👏🏻👏🏻 pic.twitter.com/hGrMKv7iir
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#SreeLeela has officially graduated, completing her medical degree ❤️
— Siddarth Srinivas (@sidhuwrites) February 11, 2026
Acting + academics - win win! pic.twitter.com/sisosEPRTZ