அங்காடி தெரு நடிகை உடல்நலக்குறைவு காரணமாக திடீர் மறைவு
செய்தி முன்னோட்டம்
2010 ஆஸ்கார் விருது பரிந்துரைப்பு பட்டியலில் இடம்பெற்ற 'அங்காடி தெரு' திரைப்படம், தமிழ் சினிமாவின் கிளாசிக் படங்கள் வரிசையில் ஒரு முக்கியமான திரைப்படம்.
பலருக்கும் திருப்புமுனையாக அமைந்த அந்த திரைப்படத்தில் நடித்தவர் சிந்து.
அந்த படத்தால் கிடைத்த வரவேற்பிற்கு பின்னர், 'கருப்பசாமி குத்தகைதாரர்' போன்ற படங்களில் துணை வேடத்தில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து பல சின்னத்திரை நாடகங்களில் நடித்த சிந்து, கடந்த 2020-ஆம் ஆண்டு மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.
நண்பர்கள் செய்த உதவியால் தனது சிகிச்சைகளை மேற்கொண்ட அவர், சமீபத்தில், நடிகர் சங்க உதவியையும் நாடியுள்ளார்.
இந்நிலையில், அவரது உடல் நிலை மோசமாக, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட சிந்து, இன்று அதிகாலை 2.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
'அங்காடி தெரு' நடிகை சிந்து
நடிகை சிந்து காலமானார்#ActressSindhu #Sindhu #AngadiTheru #RIPSindhu #Cancer #Jayaplus pic.twitter.com/LNlT93kZdx
— Jaya Plus (@jayapluschannel) August 7, 2023