
யோகா மாஸ்டரை கரம் பிடிக்கும் நடிகை ரம்யா பாண்டியன்; வெளியான திருமண விவரங்கள்
செய்தி முன்னோட்டம்
நடிகை ரம்யா பாண்டியனுக்கு அவரது காதலருடன் வரும் நவம்பர் 8ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
பிரபல நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகளான ரம்யா, 2015ஆம் ஆண்டு 'டம்மி பட்டாசு' என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.
இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. ஆனால், ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜோக்கர்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததால், நல்ல வரவேற்பைப் பெற்றார்.
அதன் பின்னர் அவர் மொட்டை மாடியில் நடத்திய போட்டோ ஷூட் மூலம் பிரபலமடைந்தார்.
பின்னர், சமுத்திரக்கனிக்கு ஜோடியாக 'ஆண் தேவதை' என்ற படத்தில் நடித்தார்.
விவரங்கள்
திருமண விவரங்கள்
நடிகையாக பிரபலமாகும் போது, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு, அவரது காமெடிகள் புகழ் பெற்றன.
தொடர்ந்து, பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மூன்றாவது இடத்தை பிடித்தார்.
இந்நிலையில், ரம்யா பாண்டியன் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த யோகா மாஸ்டரான லவெல் தவானை காதலித்து வருகிறார்.
இவர்களின் திருமணம் ரிஷிகேஷில் கங்கை நதி அருகே நடைபெறுகிறது.
திருமணம் எளிமையாக, நெருங்கிய உறவினர்களுக்குடன் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#ramyapandian prewedding viddeo #marriage #yogateacher pic.twitter.com/cEsMTqM4oK
— Chinna Chinna Asai (@chennaitodaynew) October 26, 2024