Page Loader
நடிகை தேவயானியின் மகள் +2வில் என்ன மார்க் தெரியுமா?
தேவயானியின் மகள் இனியாவின் சிறு வயது புகைப்படம்

நடிகை தேவயானியின் மகள் +2வில் என்ன மார்க் தெரியுமா?

எழுதியவர் Venkatalakshmi V
May 10, 2023
01:05 pm

செய்தி முன்னோட்டம்

90'களில் கோலிவுட்டில் பிரபலமான ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. அஜித், விஜய், கார்த்திக் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தவர் இவர். 'தொட்டாசிணுங்கி' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வாய்த்த தேவயானி, 'காதல் கோட்டை' என்ற படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். கவர்ச்சி இல்லாத, குடும்ப பாங்கான வேடங்கள் என்றாலே, கண்ணை மூடிக்கொண்டு தேவயானியை தேர்வு செய்வார்கள் இயக்குனர்களும், மக்களும். அப்படி பல வெற்றி படங்கள் நடித்து கொண்டிருந்த வேளையில், 'நீ வருவாய் என' என்ற படத்தின் மூலம் தனது வருங்கால கணவர் ராஜகுமாரனை சந்தித்தார். அதன் பின்னர், இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

card 2

பள்ளி படிப்பை முடித்த தேவயானியின் மகள்!

திருமணத்திற்கு பின்னர், சின்னத்திரையில் கவனம் செலுத்த தொடங்கிய தேவயானிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இனியா, பிரியங்கா என்ற பெயர் கொண்ட அந்த குழந்தைகளில் மூத்தவர், தற்போது +2 படிப்பை முடித்துவிட்டாராம். அவர் தேர்வில் வாங்கிய மதிப்பெண்கள் தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தேவயானி -ராஜகுமாரனின் மூத்த மகள் இனியா, 600க்கு 498 மதிப்பெண்கள் வாங்கியுள்ளாராம். ஒரு பக்கம் தாயார் நடிப்பில் முத்திரை பதித்து வர, மறுபக்கம் அவரின் மகள் படிப்பில் முத்திரை பதித்துள்ளார் என அவரின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.