
"பயமாக உணர்ந்தேன்": அத்துமீறல் விவகாரம் குறித்து மனம் திறந்த நடிகை அபர்ணா பாலமுரளி
செய்தி முன்னோட்டம்
சென்ற ஜனவரி 18 -ஆம் தேதி, எர்ணாகுளம் சட்ட கல்லூரி விழாவில் பங்கேற்ற நடிகை அபர்ணா பாலமுரளியிடம், ஒரு மாணவர் அத்துமீற முயன்ற விவகாரம், சர்ச்சைக்குள்ளானதை அடுத்து, தற்போது, அது பற்றி தனது கருத்தை கூறியுள்ளார் அபர்ணா.
நேற்று(ஜனவரி 23), 'தங்கம்' பட ப்ரோமோஷனுக்காக கொச்சிக்கு படக்குழுவினருடன் வந்திருந்தவரிடம், நிருபர்கள் இது பற்றி கேட்டபோது, "அந்த நபரை எனக்கு முன்பின் தெரியாது. அதனால், அவர் என் தோளின் மீது கை போட முயன்ற போது நான் விலகி சென்றேன். மன்னிப்பு தெரிவித்து, மீண்டும் கை குலுக்க வந்த போது, எனக்கு பயமாக இருந்தது. அதனால் நான் மறுத்து விட்டேன்," என்றார்.
ட்விட்டர் அஞ்சல்
அத்துமீறல் விவகாரம் தொடர்பாக பேசிய அபர்ணா
ആ സംഭവം വളരെ ഷോക്ക് ആയിരുന്നു, ലോ കോളേജ് വിഷയത്തിൽ പ്രതികരിച്ച് അപർണ ബാലമുരളി #AparnaBalamurali #Ernakulam #LawCollege #Kerala #ThangamMovie pic.twitter.com/ADBJeh4frt
— OneIndia Malayalam (@thatsMalayalam) January 23, 2023
அத்துமீறல் விவகாரம்
"ஒரு சட்ட கல்லூரி மாணவன் அப்படி நடந்திருக்க கூடாது"
"அது ஒரு மோசமான அனுபவம். என்றாலும், அங்கிருந்த மாணவர்கள் உடனடியாக மன்னிப்பு கேட்டதை அடுத்து, நான் வழக்கு எதுவும் தொடுக்கவில்லை" என்றார்.
தொடர்ந்து பேசிய அபர்ணா, "கல்லூரி நிர்வாகம், அந்த மாணவன் மீது நடவடிக்கை எடுத்தது குறித்து எனக்கு மகிழ்ச்சி தான். ஆனால், ஒரு சட்டக்கல்லூரி மாணவர் அவ்வாறு நடந்திருக்க கூடாது என எனக்கு தோன்றியது" என்று மேலும் தெரிவித்தார்.
இந்த விவாகரத்திற்கு பிறகு, எர்ணாகுளம் மாணவர் சங்கம், நடிகையிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரி ஒரு கடிதத்தை, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தது.
சம்மந்தப்பட்ட அந்த மாணவனை, கல்லூரி நிர்வாகம் 7 நாட்கள் தற்காலிக இடை நீக்கம் செய்தது.