ஒரே நேரத்தில் இரண்டு டாப் நடிகர்களுடன் நடிக்கும் நடிகை அபிராமி
நடிகை அபிராமி 'மாறா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி ஆனார். அதன் பின்னர் தொடர்ச்சியாக நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'மகாராஜா' படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அவர் அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் கமல் ஹாசனின் 'தக் லைஃப்' படத்தில் இணைந்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதோடு நடிகர் நாசரும் படத்தில் இணைந்துள்ளார்.