தி கோட் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகளை வெளியிட்டது படக்குழு
செய்தி முன்னோட்டம்
கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 5) நடிகர் விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்த தி கோட் படம் உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியானது.
இதில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்த நிலையில், பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா மற்றும் லைலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
ஏஜிஎஸ் எண்டெர்டைன்மெண்ட் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.
நடிகர்கள் அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் கேமியோக்களும் படத்தில் இடம் பெற்றிருந்தன.
400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் முதல் நாள் மட்டுமே ரூ.126.32 கோடி வசூலித்ததாக அறிவித்துள்ள படக்குழு, படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகளை வெளியிட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
எக்ஸ் பதிவு
The GOAT’s sneak peek is out now on Moviebuff 🔥
— AGS Entertainment (@Ags_production) September 6, 2024
▶️ : https://t.co/OvRRLM72O8
Catch this high octane action entertainer in cinemas near you 💥@actorvijay Sir
A @vp_offl Hero
A @thisisysr Magical #TheGreatestOfAllTime#ThalapathyIsTheGOAT#KalpathiSAghoram#KalpathiSGanesh… pic.twitter.com/VtWE73bpiY