LOADING...
விஜயின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்; ஜனநாயகனின் முதல் கர்ஜனை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
விஜயின் பிறந்தநாளில் ஜனநாயகனின் முதல் கர்ஜனை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

விஜயின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்; ஜனநாயகனின் முதல் கர்ஜனை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Jun 20, 2025
06:22 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனநாயகனின் முதல் கர்ஜனை (The First Roar) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விஜய் தனது 51வது பிறந்த நாளை ஜூன் 22 அன்று கொண்டாட உள்ளார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் மற்றும் விஜயின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் பல்வேறு விழாக்களை ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், பிறந்தநாளில் விஜயின் கடைசி படமாக இருக்கும் என கருதப்படும் ஜனநாயகன் திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அதுகுறித்த அப்டேட் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இதையடுத்து, தற்போது, முதல் கர்ஜனை ஜூன் 22 அன்று வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

படக்குழு அறிவிப்பு