'அண்ணே வரார் வழிவிடு': GOAT திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது; ரசிகர்கள் உற்சாகம்
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் "GOAT" படத்தின் டிரெய்லர் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) வெளியாகியுள்ளது.
நடிகர் விஜயின் 68வது படமான "GOAT" படத்தை வெங்கட் பிரபு இயக்க இதில் பிரசாந்த், பிரபுதேவா மற்றும் மோகன், ஸ்னேகா, லைலா உள்ளிட்ட பல மூத்த நடிகர்கள் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டைன்மெண்ட்ஸ் சார்பில் அர்ச்சனை கல்பாத்தி தயாரித்துள்ளார்.
படத்தின் டிரெய்லர் சனிக்கிழமை வெளியாகும் என ஆகஸ்ட் 15 அன்றே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டிரெய்லருக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், "அண்ணே வரார் வழிவிடு" என்ற தலைப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இதைப் பார்த்த ரசிகர்கள் டிரெய்லர் வீடியோவை கொண்டாடி வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
ANNE VARAR VAZHI VIDU 🔥#TheGoatTrailer 💣
— AGS Entertainment (@Ags_production) August 17, 2024
Tamil ▶️ : https://t.co/MQO7cR4pM5
Telugu ▶️ : https://t.co/adqCQ6jHuP
Hindi ▶️ : https://t.co/C8pf5SHiis@actorvijay Sir
A @vp_offl Hero
A @thisisysr Magical #TheGreatestOfAllTime#ThalapathyIsTheGOAT#KalpathiSAghoram… pic.twitter.com/qiiPOxWXX9