Page Loader
+2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு: நடிகர் விஜய்யின் புதிய திட்டம்
மாணவர்களுக்கு பரிசு வழங்க நடிகர் விஜய் திட்டம் என செய்திகள் தெரிவிக்கின்றது

+2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு: நடிகர் விஜய்யின் புதிய திட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
May 10, 2023
03:29 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய், சமீபத்தில் வெளியான +2 தேர்வில் மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியருக்கு பரிசுத் தொகை வழங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதற்காக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாவட்ட நிர்வாகிகளிடம் மாணவ மாணவியரின் விவரங்களை சேகரிக்க உத்தரவிட்டுள்ளார் எனவும் செய்திகள் கூறுகிறது. சேகரிக்கப்படும் இந்த விவரங்கள் அனைத்தும், வரும் 20 தேதிக்குள் சென்னைக்கு வந்தடைய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளதாம். இதில், பெறப்பட்ட மதிப்பெண்கள் பட்டியலுடன், மாணவர்களின் ஆதார் நகல், வங்கி பாஸ் புக்கின் நகல் மற்றும் அவர்களின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் போன்ற விவரங்களும் இணைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

card 2

விஜய், அரசியலில் நுழைய திட்டமா?

இது மட்டுமின்றி, 10-வது தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, இதே போன்ற விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் இருந்தும் விவரங்கள் சேகரிக்கப்பட்ட பிறகு, 10 ,12 ஆகிய இரண்டு வகுப்புகளில் இருந்தும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நேரடியாக உதவி தொகையை வழங்க விஜய் முடிவெடுத்துள்ளதாகவும், இதற்கான விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறுகிறது ஊடக செய்திகள். இதற்கான விழா சென்னை அல்லது திருச்சி மாவட்டத்தில் நடத்தவுள்ளதாகவும் கூறுகின்றனர். ஏற்கனவே அம்பேத்கர் பிறந்தநாள் விழாவிற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், தற்போது விஜய், மாணவர்களை உற்சாகப்படுத்த முடிவெடுத்துள்ளது, அவர் அரசியலில் நுழைய ஆயத்தமாவதை உறுதி செய்கிறதா என ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க விஜய் திட்டமா?