திடீர் என்று நடந்த விஜய்-விஷால் சந்திப்பு; பின்னணி என்ன?
நடிகர் விஜய்யை நேரில் சந்தித்துள்ளார் விஷால்! இந்த செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன் பின்னணி என்ன தெரியுமா? நடிகர் விஷால், SJ சூர்யா மற்றும் பலர் நடித்து, விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானதை அடுத்து, இன்று மாலை படத்தின் டீஸர் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நடிகர் விஜய் இந்த போஸ்டர்-ஐ வெளியிடுவார் எனவும் செய்திகள் தெரிவித்தன. இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகாத நிலையில், விஷால் தலைமையில், படக்குழு, நடிகர் விஜய்யை சந்தித்துள்ளனர். அந்த புகைப்படங்களை விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.