LOADING...
'ஜன நாயகன்' பட தணிக்கை அப்டேட்: ஜூன் 19-ல் சென்சார் சான்றிதழ் கிடைக்குமா?
'ஜன நாயகன்', தொடங்கியதில் இருந்தே பல்வேறு கடுமையான சோதனைகளை சந்தித்து வருகிறது

'ஜன நாயகன்' பட தணிக்கை அப்டேட்: ஜூன் 19-ல் சென்சார் சான்றிதழ் கிடைக்குமா?

எழுதியவர் Venkatalakshmi V
Jun 17, 2026
01:56 pm

செய்தி முன்னோட்டம்

தளபதி விஜய் திரையுலகில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பாக நடித்த அவரது கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்', தொடங்கியதில் இருந்தே பல்வேறு கடுமையான சோதனைகளை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த திரைப்படம், எதிர்பாராத நீதிமன்ற வழக்குகள், மறு தணிக்கை சிக்கல்கள் மற்றும் அரசியல் அழுத்தங்களால் முடக்கப்பட்டு, இறுதியில் இணையதளத்தில் முழுமையாக லீக் ஆனது படக்குழுவினரைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது வரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில், வரும் ஜூன் 19-ஆம் தேதி வெள்ளிக்கிழமை படத்திற்குப் தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துவிடும் எனத் திரைத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

முடிவு

விநியோகஸ்தர்களின் நஷ்டத்தை ஈடு செய்ய முதல்வர் விஜய் முடிவு

படம் திட்டமிட்டபடி தியேட்டர்களில் வெளியாகாததாலும், இணையத்தில் லீக் ஆனதாலும் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் மற்றும் படத்தை நம்பி வாங்கிய விநியோகஸ்தர்கள் கோடிக்கணக்கில் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர். பலர் வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட முடியாமல் தவித்து வரும் சூழலில், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் ஒட்டுமொத்த நஷ்டத்தையும் முதலமைச்சர் விஜய் தரப்பே ஏற்று, அதனை முழுமையாக செட்டில் செய்ய முடிவு எடுத்துள்ளதாக இணைய செய்திகள் தெரிவிக்கின்றன.

வெளியீடு

ஜூன் இறுதிக்குள் திரைக்கு வர வாய்ப்பு

லீக் ஆன போதிலும், தங்களது தலைவனின் கடைசித் திரைப்படத்தைத் திரையரங்குகளில் மட்டுமே பார்ப்போம் என்று தீவிர விஜய் ரசிகர்கள் பலர் இன்னமும் இணையப் படத்தைப் பார்க்காமல் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதனால், வரும் ஜூன் 19 அன்று சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டால், அடுத்த வாரமே (ஜூன் 25 அல்லது 26-ஆம் தேதி) படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். ஒருவேளை இந்த மாத இறுதிக்குள் படம் தியேட்டருக்கு வரவில்லை என்றால், ரசிகர்களின் பொறுமை எல்லை மீறக்கூடும் என்பதால் தணிக்க வாரியத்தின் இறுதி முடிவுக்காக ஒட்டுமொத்த கோலிவுட்டும் ஆவலுடன் காத்துக் கிடக்கின்றது.

Advertisement