LOADING...
நடிகர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: மவுனம் கலைத்த தந்தை SAC
விவாகரத்து வழக்கு நேற்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது

நடிகர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: மவுனம் கலைத்த தந்தை SAC

எழுதியவர் Venkatalakshmi V
Apr 21, 2026
11:48 am

செய்தி முன்னோட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஒருபுறம் தீவிர அரசியல் களத்திலும் மறுபுறம் தனிப்பட்ட வாழ்க்கையில் கடுமையான சட்டப் போராட்டங்களிலும் சிக்கியிருக்கும் நிலையில், அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு நேற்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நேற்றைய விசாரணையின் போது, இந்த வழக்கை ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அன்றைய தினம் நடைபெறவுள்ள விசாரணையில், தான் நேரில் ஆஜராகாமல் காணொலி காட்சி (Video Call) மூலமாக ஆஜராக அனுமதி கோரி விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எஸ்.ஏ.சி

"கேரக்டர் படுகொலை": எஸ்.ஏ.சியின் ஆவேசப் பதிலடி

விஜய் தனது தந்தை மற்றும் தாயை ஒதுக்கி வைப்பதாகவும், குடும்பத்தை முறையாக கவனிக்கவில்லை என்றும் எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் பதிலளித்துள்ளார். தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், "விஜய்யை குடும்பத்திற்கு எதிரி போலச் சித்திரிக்கிறார்கள். இது திட்டமிட்ட 'கேரக்டர் படுகொலை'. எப்போதோ பேசித் தீர்க்கப்பட்டு, கையெழுத்திடப்பட்ட பழைய விஷயங்களை இப்போது தேர்தல் நேரத்தில் வேண்டுமென்றே வெளியே கொண்டு வருகிறார்கள்" என்று சாடியுள்ளார். மேலும், திமுக ஆட்சியில் இருப்பதைச் சுட்டிக்காட்டி தான் எச்சரித்தபோதும், "எல்லாவற்றையும் எதிர்கொள்கிறேன் அப்பா" என்று விஜய் தைரியமாகப் பதிலளித்ததையும் எஸ்.ஏ.சி நினைவு கூர்ந்தார்.

Advertisement