NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நடிகர் வடிவேலுவின் சகோதரர் உடல்நலக்குறைவால் காலமானார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடிகர் வடிவேலுவின் சகோதரர் உடல்நலக்குறைவால் காலமானார்
    நடிகர் வடிவேலுவின் சகோதரர் உடல்நலக்குறைவால் காலமானார்

    நடிகர் வடிவேலுவின் சகோதரர் உடல்நலக்குறைவால் காலமானார்

    எழுதியவர் Nivetha P
    Aug 28, 2023
    03:54 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவுலகில் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான 'என் தங்கை கல்யாணி' என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமானவர்.

    பின்னர் 'தேவர் மகன்', 'ராசாவின் மனசிலே' உள்ளிட்ட படங்கள் மூலம் மக்களுக்கு அறியப்பட்டார்.

    அதன் பின்னர் அவர் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

    இடையே சிறிது காலம் படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு அண்மையில் 'மாமன்னன்' என்னும் படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை.

    நடிகர் வடிவேலுவிற்கு மொத்தம் 3 தம்பிகள், 2 தங்கைகள், இவர்கள் அனைவரையும் மிகச்சிறப்பாக கவனித்து வந்துள்ளார் வடிவேலு.

    காலமானார் 

    சிம்பு அறிமுகமான 'காதல் அழிவதில்லை' உள்ளிட்ட 3 படங்களில் நடித்துள்ளார் ஜெகதீஸ்வரன்

    அதுமட்டுமல்லாமல் அவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்தவர் வடிவேலு தான் என்று அவரது சகோதரரான ஜெகதீஸ்வரன் ஓர் பேட்டியில் கூட கூறியிருப்பார்.

    ஜெகதீஸ்வரன் சிம்பு அறிமுகமான 'காதல் அழிவதில்லை' உள்ளிட்ட 3 படங்களில் நடித்துள்ளாராம்.

    பின்னர் சொத்துப்பிரச்சனை உள்ளிட்ட சில காரணங்களால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திய அவர், மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில், கடந்த சிலநாட்களாக கல்லீரல் செயலிழப்பு காரணமாக மதுரை ஐராவதநல்லூரில் சிகிச்சை பெற்றுவந்த ஜெகதீஸ்வரன்(55) இன்று(ஆகஸ்ட்.,28) காலை காலமானார்.

    தற்போது இவரது மறைவிற்கு சினிமா வட்டாரங்கள் மற்றும் வடிவேலு ரசிகர்கள் உள்ளிட்ட பலர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வடிவேலு
    திரைப்படம்

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    வடிவேலு

    துணிவு மற்றும் வாரிசு இரண்டு படங்களும் வெற்றியடைய வேண்டும் - வடிவேலுவின் சமீபத்திய பேட்டி தமிழ் திரைப்படம்
    வடிவேலுவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் வைரலான ட்வீட்
    வடிவேலுவுக்கு முனைவர் பட்டம்: அண்ணா பல்கலைக்கழகத்தை ஏமாற்றிய பலே கில்லாடிகள் தமிழ்நாடு
    20 ஆண்டுகளுக்கும் மேலாக வடிவேலுவை ஒதுக்கிய 'தல' அஜித்: வெளியான உண்மை காரணம் நடிகர் அஜித்

    திரைப்படம்

    கே.ஜி.எஃப் - சலார் படங்கள் மூலமாக புதிய சினிமாட்டிக் யூனிவெர்ஸை உருவாக்கும் பிரசாந்த் நீல் திரைப்பட அறிவிப்பு
    "யாராக இருந்தாலும் சுய விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்": உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்
    ஆதிபுருஷ் படத்தின் வசனகர்த்தா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரல்  பிரபாஸ்
    இன்று தமிழ் திரையுலகின் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் பிறந்தநாள்  ரஜினிகாந்த்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025