
வடிவேலுவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம்
செய்தி முன்னோட்டம்
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் இயங்கிவரும் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம், ஆண்டுதோறும் சமூக அக்கறையும், பொறுப்புர்ணர்வுடன் செயல்பட்டு வரும் பிரபலங்களுக்கு விருது தந்து கவுரவப்படுத்தி வருகிறது.
இந்த ஆண்டு, நடிகர் வடிவேலுவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் தந்து கவுரவப்படுத்தியுள்ளது. வடிவேலுவுக்கு, பொழுதுபோக்கு என்ற பிரிவின் கீழ் இந்த விருதை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்ற ஆண்டு இதேபோல, நடிகர்-இயக்குனர், லாரன்ஸ் ராகவேந்திராவிற்கு சிறந்த சமூக சேவைக்காக டாக்டர் பட்டம் தந்து கவுரவித்தது இந்த ஆணையம்.
வடிவேலு, தற்போது ராகவா லாரன்சுடன் இணைந்து 'சந்திரமுகி-2' படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் நிறைவு பெற்றது.
ட்விட்டர் அஞ்சல்
டாக்டர் வடிவேலு!
Watch | நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலுக்கு, பொழுதுபோக்கு பிரிவின் கீழ் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம்!#SunNews | #IAHRC | #Vadivelu pic.twitter.com/cstlDcqvZJ
— Sun News (@sunnewstamil) February 27, 2023