அடுத்த செய்திக் கட்டுரை

அதிதி ராவ் ஹைதரியின் போஸ்ட்டுக்கு கருத்து பதிவிட்ட நடிகர் சித்தார்த்: உண்மையில் காதலா?
எழுதியவர்
Arul Jothe
May 25, 2023
04:49 pm
செய்தி முன்னோட்டம்
இந்திய திரையுலகத்தின் முக்கிய நடிகைகளில் ஒருவர் அதிதி ராவ் ஹைதரி.
ஹிந்தி தொடங்கி தமிழ் வரை சிறந்த நடிகையாகவும் பாடகியாகவும் பணியாற்றி வருகிறார்.
பிரான்ஸில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு இந்திய திரையுலகில் இருந்து பல முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர்.
விழாவிற்கு நீல நிற ஆடை அணிந்து சென்ற அதிதி ராவ் ஹைதரி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் கருத்துகள் பிரிவில், அதிதியின் வதந்தி காதலரும் நடிகருமான சித்தார்த் இதயம் மற்றும் நெருப்பு எமோஜிகளுடன் "ஓ மை" என்று கருத்து தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் இருவரும் பொது இடங்களில் ஒன்றாக தான் தென்படுகின்றனர்.
இருவரும் சேர்ந்து நடனமாடும் வீடியோக்களையும் பகிர்வதால் ரசிகர்கள் காதலாக தான் இருக்குமோ என்று குழப்பத்தில் உள்ளனர்.