
ஆளவந்தான் திரைப்படத்தில் கமலுக்கு டூப் போட்ட பிரபல நடிகர் யார் தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
2001 ஆம் ஆண்டு, கலைப்புலி தாணு தயாரிப்பில், கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஆளவந்தான்'.
கமல் இரு வேடங்களில், ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்திருப்பார். படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக கமலின் நடிப்பு பாராட்டப்பட்டது.
குறிப்பாக மனநல பிரச்சனைகளை பற்றி அப்போதைய காலகட்டத்தில் யாரும் பரவலாக பேசாதிருந்த நேரத்தில், அந்த கதையை தேர்வு செய்து நடித்திருந்தார் கமல்.
அப்படத்தில், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உடல் எடை கூடியிருந்தார் அவர்.
இந்த சூழலில், இப்படத்தின் டிஜிட்டல் வெர்ஷன் சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது
card 2
கமலுக்கு டூப் போட்டது இவரா?
படத்தின் ரீ- ரிலீஸ் கொண்டாடப்பட்டு வரும் இந்த நேரத்தில், பிரபல நடிகை உமா ரியாஸ், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், தனது கணவரும், நடிகருமான ரியாஸ் கானுடன் ஒரு நேர்காணல் செய்தார்.
அதில், "ஆளவந்தான் திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு டூப் போட்டது நீங்கள் தான். ஆனால், உங்களை பற்றி யாருக்கும் தெரியவே இல்லையே. இது பற்றி உங்கள் எண்ணம் என்ன?" எனக்கேட்டார்.
அதற்கு ரியாஸ்,"ஆம், அந்த படத்தில் நான் நடித்தது பற்றி யாருக்குமே தெரியவில்லை. படம் வெளியானபோது தனியார் பத்திரிகை ஒன்றில் ஒரு சின்ன செய்தி வந்தது. அவ்வளவுதான். ஆனால், படம் முழுவதும், நான், கமல் சார் உடன் பயணம் செய்தேன். படம் முழுவதும் அவருக்கு நான் தான் பாடி-டபுள்" என்று கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
ஆளவந்தான் திரைப்படத்தில் கமலுக்கு டூப் போட்ட ரியாஸ்
யோவ் @ikamalhaasan ஆளவந்தான் படம் முழுக்க டூப் போட்டது ரியாஸ் கான் னு சொல்லாமையே மறச்சுட்டீங்க. பலே ஆளு தான் யா👌BODY DOUBLE வச்சே முழு படம் எடுத்துருக்கானுங்க. pic.twitter.com/JHqpSCEXBa
— RajaGuru (@swatson2022) December 15, 2023