நடிகர் அஜித்-ஷாலினி திருமணத்திற்கு 'No' சொன்ன நடிகர் யார் தெரியுமா?
நடிகர் அஜித்- நடிகை ஷாலினி இன்று அவர்களது 23வது திருமணநாள் விழாவை கொண்டாடி வருகிறார்கள். அவர்களை விட, 'தல'அஜித்தின் ரசிகர்கள், இதை ஒரு விழாபோல இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். இந்த காதல் தம்பதிகளின் அரிய புகைப்படங்கள், திருமண நாள் புகைப்படங்கள் போன்றவற்றையும் பகிர்ந்து வருகின்றனர். இந்த வேளையில், இந்த காதல் தம்பதிகளின் ஆரம்ப நாட்களில், இவர்களின் காதலுக்கு 'No' சொன்ன நடிகர் யார் என தெரியுமா? நடிகர் அஜித்தும் - நடிகை ஷாலினியும் 'அமர்க்களம்' படத்தின் போதுதான் சந்தித்து கொண்டனர் என்பதும், அந்த படத்தின் ஷூட்டிங் போதே இருவரும் காதல் வயப்பட்டனர் என்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால், அந்த படத்தில் நடித்த ரமேஷ் கண்ணா, இவர்களின் காதலுக்கு வில்லனாக வந்தார் எனபது தெரியுமா?
அஜித்திற்கு அட்வைஸ் செய்த ரமேஷ் கண்ணா
தமிழ் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் ரமேஷ் கண்ணா. இவர் நடிகர் மட்டுமல்ல, கதாசிரியர், இயக்குனர், வசனகர்த்தா என பன்முக திறமை கொண்டவர். இவர் அஜித்துடன் பல படங்களில் நடித்துள்ளார். அவருடன் நல்ல நட்பில் இருப்பவர். 'அமர்க்களம்' ஷூட்டிங்கின் போது, அஜித்திடம், "இப்போ உனக்கு மார்க்கெட் நல்ல இருக்கு. நல்ல ஹோம்லி பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோ. சினிமால யாரையும் லவ் பண்ணிடாத" என அறிவுரை கூறியுள்ளார். அவருக்கு அப்போது தெரியாதாம், அஜித்தும்-ஷாலினியும் காதலிக்கிறார்கள் என்ற விஷயம். ரமேஷ் கண்ணா, அஜித்திடம் பேசுவதை கேட்ட இயக்குனர் சரண், அவரை அழைத்து, அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என உண்மையை கூறிய பின்னர்தான், ரமேஷ் கண்ணாவிற்கு விஷயமே புரிந்ததென அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.