
"நாங்கள் பிரிந்துவிட்டோம்..என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா": ராஜ்கிரணின் மகள் வெளியிட்டுள்ள வீடியோ
செய்தி முன்னோட்டம்
நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா, தான் காதலித்து திருமணம் செய்த முனிஷ் ராஜாவை பிரிந்து விட்டதாக ஒரு வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில்,"எல்லோருக்கும் வணக்கம் நான் பிரியா...ராஜ்கிரண் சாரின் வளர்ப்பு மகள். நான் 2022-ல் நடிகர் முனிஷ் ராஜாவை திருமணம் செய்தேன்...அது மீடியா மூலமாக உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்த கல்யாணத்துக்கு அப்பறம்...இப்போது பிரிந்துவிட்டோம்".
"பிரிந்து இரண்டு மாதம் ஆகிவிட்டது...இது சட்ட பூர்வமான திருமணம் கிடையாது...இந்த திருமணத்திற்காக என் அப்பாவை மிகவும் அசிங்கப்படுத்திவிட்டேன்".
"நான் இவ்வளவு செய்த போதும் கூட, எனக்கு ஒரு பிரச்னை என வந்த போது என் தந்தை சத்தியமாக வந்து உதவினார். இது நான் எதிர்பாராத கருணை....என்னை மன்னித்து விடுங்கள் அப்பா" என தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
ராஜ்கிரணின் மகள் வெளியிட்டுள்ள வீடியோ
"எங்கள் திருமணம் சட்டபூர்வமானது இல்லை. நாங்கள் பிரிந்து விட்டோம், மன்னிச்சிடுங்க அப்பா!" - ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா#Rajkiran | #MunishRaja | #Priya pic.twitter.com/hIijiYke95
— சினிமா விகடன் (@CinemaVikatan) February 1, 2024
ராஜ்கிரண் மகள்
இதற்கு முன்னால் நடந்தது என்ன?
ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா. இவர், கடந்த 2022-ஆம் ஆண்டு, 'நாதஸ்வரம்' சீரியல் நடிகர் முனிஷ் ராஜாவை காதலித்து, குடும்பத்தின் எதிர்ப்பை மீறி கரம் பிடித்தார்.
சமூகவலைத்தளம் மூலமே இவர்கள் நட்பு துவங்கியது.
முனிஷ் ராஜா வீட்டார் இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், ராஜ்கிரண் இதற்கு சம்மதிக்கவில்லை.
உடனே வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்துகொண்டார் பிரியா. கூடவே, ராஜ்கிரண் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார்.
இது குறித்து பதிலளித்த ராஜ்கிரண், தனக்கு நைனார் முகம்மது என்கிற மகன் மட்டுமே இருப்பதாகவும், ஜீனத் பிரியா தனது வளர்ப்பு மகள் என்றும், இனி அவருக்கும் தனது குடும்பத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என குறிப்பிட்டிருந்தார்.
அதுமட்டுமின்றி முனிஷ் ராஜாவையும் சாடியிருந்தார்.