வந்தே பாரத் ரயிலில் வழங்கப்படும் உணவின் தரத்தை பற்றி நடிகர் பார்த்திபன் புகார்; ரயில்வேயின் பதில் என்ன?
நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் சேவை இயங்கி வரும் நிலையில், இந்த ரயில் குறித்து கிடைக்கும் புகார்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. சமீபத்தில், இயக்குனரும், நடிகருமான பார்த்திபன், வந்தே பாரத் ரயிலில் உணவு சரியாக இல்லை என்று புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார். புகாரின் நகலையும் அவர் பதிவிட்டுள்ளார். தனது டீவீட்டில் அவர் தெரிவித்ததாவது,"உணவு பறிமாறியவர்கள் சிறப்பாக செயல்பட்டனர், ட்ரெய்ன் சுகாதாரமாக இருந்தது. ஆனால், இரவு 19:22 மணிக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் கிச்சன் மிகவும் மோசமாக இருந்தது. உணவுக்காக பெருந்தொகை செலவழித்து இப்படியெல்லாம் பறிமாறுவது கண்டிக்கத்தக்கது. ஆரோக்கியம் அவசியம்" என தெரிவித்துள்ளார்.
Twitter Post
முக்கியம் என்பது அவரவர் மனநிலை சார்ந்தது.சார் அதை comment செய்ததால் உடனே இப்பதிவு. 'வந்தே பாரத்'-தில் தந்தே உணவு தரமாக இல்லை . பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. ஆரோக்ய கேடென சுற்றத்தார் முனுமுனுத்தார்கள். நான் complaint book-ஐ வாங்கி கிறுக்கல்கள் எழுதி கொடுத்தேன். நானதில் தொடர்ந்து... pic.twitter.com/GmyyeTLLVb— Radhakrishnan Parthiban (@rparthiepan) October 14, 2024
ரயில்வேயின் பதில் என்ன?
இந்த புகார் தற்போது இணையத்தில் வைரலாக பரவியுள்ளது, மேலும் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பார்த்திபன் இந்த பதிவை வெளியிட சில மணிநேரங்களுக்குப் பிறகு, இரவு 7 மணியளவில், சேலம் ரயில்வே கோட்டத்தின் கோட்ட ரயில்வே மேலாளர் புகாருக்கு பதிலளித்து, "உங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துகிறோம். சேவை குறைபாடு குறித்து சம்பந்தப்பட்ட உரிமதாரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் உணவு தரத்தை மேம்படுத்த பேஸ் கிச்சன் மற்றும் ஆன் போர்டு ஆய்வு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது" என பதிலளித்தது குறிப்பிடதக்கது.
Twitter Post
We deeply regret the inconvenience caused. The concerned licensee is being taken up for the service deficiency. Also the Base Kitchen and on board inspection are being intensified to improve the food quality.— DRM Salem (@SalemDRM) October 14, 2024