
சிறுநீரக கல் காரணமாக, நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி
செய்தி முன்னோட்டம்
இளைய திலகம் நடிகர் பிரபு, சிறுநீரக கல் பிரச்சனை காரணமாக இரு தினங்களுக்கு முன்னர் (பிப்.,20) கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, "நடிகர் பிரபு நேற்று (20 பிப் 2023) இரவு சிறுநீரகப் பிரச்சினை காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு, இன்று காலை யூரித்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டன".
"அவர் தற்போது பூரண உடல் நலத்துடன் இருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு பிந்தைய - பொதுவான மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு, ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பிரபு, கடைசியாக, விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' படத்தில் நடித்திருந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
நடிகர் பிரபு உடல்நலம் பாதிப்பு
#NewsUpdate | நடிகர் பிரபுவுக்கு சிறுநீரக கல் அகற்றம்!#SunNews | #ActorPrabhu | #Kidneystones pic.twitter.com/Fze1gdZKJU
— Sun News (@sunnewstamil) February 22, 2023